Sunday, February 1, 2026

அதிரை பேரூராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்!!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 மற்றும் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் இன்று (12. 10. 2019) சனிக்கிழமை காலை டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது முகாமிற்கு அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றத்தின் தலைவர் வ.விவேகானந்தம் தலைமை வகித்தார். அதிராம்பட்டினம் பேரூராட்சி மன்ற துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன் முன்னிலை வகித்தார். ஷம்சுல் இஸ்லாம் சங்க செயலாளர் பேராசிரியர். ஹாஜி எம்.ஏ.அப்துல் காதர் முகாமை துவக்கி வைத்தார், அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த சேர்மன் வாடி, செக்கடிமேடு, கரையூர் தெரு, மேலத்தெரு, சிஎம்பி லைன், ஷிஃபா மருத்துவமனை, கடற்கரைதெரு, கடைத்தெரு மீன் மார்க்கெட் மற்றும் ஏரிப்புறக்கரை ஊராட்சியை சேர்ந்த பிலால் நகர் ஆகிய இடங்களில் 5200 பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. முகாமில் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் சங்க செயலாளர எம்.எப். முஹம்மது சலீம், பொருளாளர் எம்.முத்துக்குமரன், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.அஹமது அனஸ், என்.ஷேக்தம்பி, தூய்மை தூதுவர்கள் மேலத்தெரு என். முகம்மது மாலிக், கடற்கரை தெரு ஏ. அப்துல் மாலிக் மற்றும் ஷம்சுல் இஸ்லாம் சங்க பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு நிலவேம்பு குடிநீரை வழங்கினர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img