அதிராம்பட்டிணத்தில் மாணவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ( CFI ) ஏற்பாடு செய்திருந்தது,
இதில் சிறப்பு அழைப்பாளராக
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்( CFI ) மாநில தலைவர் ஜனாப் அப்துல் ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்வில் பேசிய மாநில தலைவர் ஜனாப் அப்துல் ரஹ்மான் அவர்கள் மாணவர்களுக்கான சமூக பொறுப்புகள், மற்றும் CAA சட்டம் குறித்த அபாயங்கள் பற்றியும் மாணவர்களுக்கு விளக்கினார்கள்.
மேலும் இந்நிகழ்வில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயளாலர் மதுக்கூர் நஜிப் அவர்களும்,
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நகர தலைவர் அதிரை நவாஸ் அவர்களும் முன்னிலை வகித்தார்கள்..








