பேராவூரணி, ஜூன்.21-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பைங்கால் கிராமத்தின் தெற்கு கடைசி எல்லையும் புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு வடக்கு எல்லையுமான கல்லணை கால்வாய் பெரிய ஆறு இரண்டு கிராமத்திற்கும் எல்லையில் சுமார் 75 அடி நீளத்தில் உடைப்பு ஏற்பட்டது.இதனால் கிழக்கு பகுதியில் 600 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த உளுந்து,பயிறு,எள்,கரும்பு, நெல்,தென்னங்கன்றுகள் வெள்ளத்தில் அடியோடு அடித்து செல்லப்பட்டது.இதனால் ரூ.50 லட்சம் நாசமடைந்துள்ளது.பாதிக்கப்பட்ட இடத்தை பைங்கால் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கவிஞர் மா.பழனிவேல், ஊராட்சி மன்ற தலைவர் அமுதா சுப்பிரமணியன், ஒன்றிய குழு உறுப்பினர் சங்கவி மதன்குமார்,பேராவூரணி வட்டாட்சியர் க. ஜெயலட்சுமி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள்,200 கிராம விவசாயிகள் ஆற்றில் இறங்கி உடைப்பை அடைப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர்.
More like this

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...










