மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள, பள்ளி, கல்லூரிகளில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடைவிதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்கள், ஓட்டல்களில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடைவிதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் முதல்கட்ட சோதனையாக இந்த திட்டம் தற்போது தலைமை செயலகத்தில் அமல்படுத்த பட்டுள்ளது. அடுத்த வருடம் மார்ச்.18ம் தேதி மகாராஷ்டிர புத்தாண்டு தினமான அன்று, மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் பாட்டில் தடை அமல் செய்யப்படும். தடையை மீறும் உற்பத்தியாளர்கள், வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்என்றும், அதேநேரம் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்படாது என்றும் மகாராஷ்டிர அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!
அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)
அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...
அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!
நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில்
இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...





