Saturday, May 18, 2024

பெங்களூர் & சென்னை பகல் நேர தினசரி சிறப்பு ரயில்கள் அட்டவணை!!

Share post:

Date:

- Advertisement -

அக்டோபர் 23ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை

வண்டி எண். 02068 பெங்களூர் & சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், பெங்களூரில் இருந்து காலை 6:20க்கு புறப்பட்டு, பகல் 12:35க்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.

மறுமார்கத்தில் வண்டி எண். 02067 சென்னை & பெங்களூர் சிறப்பு ரயில், சென்னையில் இருந்து பிற்பகல் 3:30க்கு புறப்பட்டு, இரவு 9:35க்கு பெங்களூர் சென்றடையும்.

13 இரண்டாம் வகுப்பு அமரும் வசதி மற்றும் 2 அமரும் வசதி கொண்ட குளிர்சாதன பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் இந்த ரயில், பெரம்பூர், அரக்கோணம், சோலிங்குர், வாலாஜா ரோடு, காட்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, குப்பம், பங்கேற்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூர் கண்டோன்மெண்ட் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னையில் இருந்து அக்டோபர் 24ம் தேதி முதல் டிசம்பர் 1ம் தேதி வரை

வண்டி எண். 02658 பெங்களூர் & சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், பெங்களூரில் இருந்து இரவு 10:40க்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4:35க்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.

மறுமார்கத்தில் வண்டி எண். 02657 சென்னை & பெங்களூர் சிறப்பு ரயில், சென்னையில் இருந்து இரவு 10:55க்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4:45க்கு பெங்களூர் சென்றடையும்.

13 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி, 3 முன்று அடுக்கு குளிர்சாதன வசதி பெட்டி, 2 இரண்டு அடுக்கு குளிர்சாதன வசதி பெட்டி, 1 முதல் வகுப்பு குளிர்சாதன வசதி பெட்டி மற்றும் 2 பொது வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் இந்த ரயில், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, பங்கேற்பேட்டை, பெங்களூர் கண்டோன்மெண்ட் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

02028/02027 பெங்களூர் & சென்னை குளிர்சாதன சிறப்பு ரயில்.

அக்டோபர் 23ம் தேதி முதல் – செவ்வாய்க்கிழமை சேவை இல்லை

வண்டி எண். 02028 பெங்களூர் & சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், பெங்களூரில் இருந்து காலை 6மணிக்கு புறப்பட்டு, காலை 11மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.

மறுமார்கத்தில் வண்டி எண். 02027 சென்னை &பெங்களூர் சிறப்பு ரயில், சென்னையில் இருந்து மாலை 5:30மணிக்கு புறப்பட்டு, இரவு 10:30க்கு பெங்களூர் சென்றடையும்.

12 இரண்டாம் வகுப்பு குளிர்சாதன அமரும் வசதி பெட்டிகள் மற்றும் 2 அமரும் வசதி கொண்ட முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் இந்த ரயில், காட்பாடி மற்றும் பெங்களூர் கண்டோன்மெண்ட் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...