Sunday, February 1, 2026

முஸ்லிம்களின் கடும் எதிர்ப்பால் பணிந்த திமுக !

spot_imgspot_imgspot_imgspot_img

நேற்று வெளியிடப்பட்ட திமுக தேர்தல் அறிக்கையில், இஸ்லாமியர்களுக்கு எதிரான குடியுரிமை சட்டங்கள் எதிர்ப்பு குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால் இஸ்லாமியர்கள் மத்தியில் திமுக மீது கடும் அதிருப்தியும், கோபமும் ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை மேலும் 5 வாக்குறுதிகள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறுவதாக அக்கட்சி அறிவித்தது. அதன்படி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படுவதற்கு திமுக அழுத்தமான குரல் கொடுக்கும் என்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் இந்த அறிவிப்பை இஸ்லாமியர்கள் வரவேற்றுள்ளனர். மேலும் எட்டுவழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படாது, காட்டுப்பள்ளியில் அதானி துறைமுகம் அமைய அனுமதி அளிக்கப்படாது, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை EIA 2020 நிராகரிக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளும் அதில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

பட்டுக்கோட்டை: ஸ்ரீமான் நாடிமுத்து திருவுருவ சிலைக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் TRB...

பட்டுக்கோட்டை ஸ்ரீமான் நாடிமுத்து பிள்ளை திருவுருவ சிலை அடிக்கல் நாட்டப்பட்டது பட்டுக்கோட்டை யூனியன் அலுவலகம் அருகே ஸ்ரீமான் நாடிமுத்து பிள்ளை அவர்களின் திருவுருவ சிலை...
spot_imgspot_imgspot_imgspot_img