Monday, May 6, 2024

அதிரை கல்லூரியில் ஆன்மீக பெருவிழா ! மாநிலங்களவை எம்பி கலந்துக் கொண்டார் !

Share post:

Date:

- Advertisement -

காதிர்முகைதீன் கல்லூரியின் மீலாது நபி விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் புதுக்கோட்டை அப்துல்லாஹ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது பெருமானாரின் புகழ்பாடும் இத்தருணத்தில் ஆன்மிகமும் அரசியலும் வெவ்வேறு அல்ல ஆன்மீக பாதையில் அரசியலில் பயணிக்க முஹம்மது நபியவர்கள் ஏராளமான சான்றுகளை விட்டு சென்றுள்ளார் என்றும் இன்றைய இளைஞர்கள் ஆன்மீக வழி நின்று அரசியல் செய்ய முன் வர வேண்டும் என கேட்டு கொண்டார்.

கல்லாகட்டும் கல்லூரிகளை கண்டிருக்கிறேன் ஆனால் ஒரு ஆன்மிக தலைவருக்கு விழா எடுக்கும் கல்லூரி ஒன்று இருக்கிற தென்றால் அதிரை காதிர் முகைதீன் கல்லூரி என்றால் மிகையில்லை.

பாதை மாறும் இளைஞர்களை நல் வழிப்படுத்தும் நன் நோக்கில் செயல்படும் இக்கல்லூரி பல நூறாண்டுகள் சேவை புரிய வேண்டும் என்றார்.

இதனை தொடர்ந்து சென்னை பாலவாக்கம் அபூபக்கர் உஸ்மானியின் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.

முன்னதாக விருந்தினர்களை கல்லூரியின் செயலாளர் மிராஷாகிபு வரவேற்றார்.இந்நிகழ்வில் கல்லூரி மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு(ஜெய்தூன் அம்மாள் அவர்கள்)

அஸ்ஸலாமு அலைக்கும் மேலத்தெரு நத்தர்ஷா குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் P.முஹம்மது காசிம் அவர்களுடைய...

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...