அதிரை சி.எம்.பி லைனின் பிரதான சாலை மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என கடந்த அதிமுக ஆட்சி முதலே பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். இந்நிலையில் 2021ம் ஆண்டு தேர்தலில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட திமுகவின் கா.அண்ணாதுரையிடமும் சி.எம்.பி லைன் சாலை தொடர்பாக பொதுமக்கள் கோரிக்கைவிடுத்தனர். இதனையடுத்து ஊராட்சி ஒன்றிய சாலையாக இருந்த சாலையை ஊரக சாலையாக மாற்றி தரமான சாலை அமைக்க துறை சார்ந்த அதிகாரிகளிடம் கா.அண்ணாதுரை வலியுறுத்தினார். இந்நிலையில் சுமார் ரூ.2.50கோடி மதிப்பீட்டில் சி.எம்.பி லைன் பிரதான சாலையை சீரமைக்கும் பணி துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை பங்கேற்று சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அதிரை சேர்மன் எஸ்.எச்.அஸ்லம், சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
கட்டுக்கடங்கா மகிழ்ச்சியில் அதிரை சி.எம்.பி லைன் மக்கள்! சாலை பணியை துவக்கி வைத்தார் எம்.எல்.ஏ!!
More like this
அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)
அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...
உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...
அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...
அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...