
அதிரை வண்டிப்பேட்டை அடுத்த மதுக்கூர் சாலையில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆழ்துளை கிணற்றிலிருந்து நீர் எடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சேமித்து பின்னர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவது வழக்கம். இந்த சூழலில் சம்மந்தப்பட்ட அந்த ஆழ்துளை கிணற்றின் பைப் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக ஓடுகிறது. கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுமக்கள் அஞ்சும் சூழலில் இதனை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனத்தில் உடனடியாக குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் விணாகாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிரையில் உடைந்தது பிரதான குடிநீர் குழாய்! வீணாகும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர்!!
More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...
அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!
அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!
அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை.
அதிராம்பட்டினம், ஜன. 7:...





