Monday, May 20, 2024

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்., INTJ வெளியிட்ட கண்டன அறிக்கை..!

Share post:

Date:

- Advertisement -

அதிரை பழைய இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் குறித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅதின் மாநில செயலாளர் A.யாசர் அரபாத் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் குறிப்பிட்டவை பின்வருமாறு…

அதிரையில் இமாம் ஷாபி (ரஹ்) பெண்கள் மேல்நிலைப் பள்ளி பழைய கட்டிடத்திற்கு சீல் வைத்த அதிராம்பட்டினம் நகராட்சி நிர்வாகத்தின் அத்துமீறலை..

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கிறது.

உடனடியாக திமுக தலைமை மற்றும் முதல்வர் தலையிட்டு சீல் வைக்க பட்ட அதிரை இமாம் ஷாஃபி(ரஹ்) பெண்கள் மேல்நிலைப் பள்ளி பழைய பள்ளியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் 50 ஆண்டுகள் மேலாக நீண்ட காலமாக இயங்கி வரும் அதிரை இமாம் ஷாஃபி(ரஹ்) பெண்கள் மேல்நிலைப் பள்ளி பழைய பள்ளி என்பது மிக பாராம்பரியம் கொண்டது பல்வேறு மாணவர்களை உருவாக்கும் விதமாக செயல்பட்ட கல்வி கூடம் விசயத்தில் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது.அத்துமீறி அதிராம்பட்டினம் நகராட்சி சீல் வைத்தது, கட்டிட பகுதிகளை இடிக்க JCB கொண்டு வந்தது என்பது எல்லாம் மிக பெரிய அராஜகத்தை தான் காட்டுகிறது.திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் திமுக தலைமையிலான தமிழ் நாடு அரசு கீழ் உள்ள திமுக நிர்வாகிகள் உள்ள அதிரை நகராட்சி நிர்வாகம் செயல்பாடுகள் என்பது காட்டாச்சியின் நீட்சியாக இருக்கிறது.

அதிராம்பட்டினம் நகராட்சி நிர்வாகத்தின் இந்த அராஜக போக்கை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கிறது..

அதிரை இமாம் ஷாஃபி (ரஹ்) பெண்கள் மேல்நிலைப் பள்ளி பழைய கட்டிடம் பள்ளிக்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைத்தது கண்டித்து அதிராம்பட்டினம் பொது மக்கள் கடந்த மூன்று நாட்களாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.சிறுபான்மை சமூகத்தின் சார்பாக இயங்கி வரும் கல்வி நிறுவனங்கள் மீது தொடர்ந்து திமுக நிர்வாகிகள் குறி வைத்து செயல் படுவது பொது மக்கள் மத்தியில் மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடனடியாக தமிழ் நாடு முதல்வர் மற்றும் அரசு அதிகாரிகள் தலையிட்டு அதிரை பழைய ஷாபி பள்ளி விசயத்தில் துரித நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், இதில் திட்டமிட்டு விஷமத்தை விதைக்கும் வகையில் செயல் படும் நகராட்சி அதிகாரிகள் ஒரு சில திமுக நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : அஹமது சல்மான் அவர்கள்..!!

புதுமனைத் தெருவை சேர்ந்த (சித்தீக் பள்ளி எதிர்) மர்ஹும் செ.மு.முஹம்மது இக்பால்...

அடுத்து என்ன படிக்கலாம்? மாணவ/மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி – கீழத்தெரு நூருல் முகம்மதியா சங்கத்தினர் அசத்தல்.

2024-25ஆம் கல்வியாண்டிற்கான முன்னேற்பாடுகளை கல்வி நிலையங்கள் எடுத்து வருகிறது. சமீபத்தில் +2, SSLCக்காண...

அதிரை: நடுத்தெருவில் ப(லி)ழிவாங்க துடிக்கும் மெகா பள்ளம் – கவுன்சிலர் கணவரின், பொறுப்பற்ற பதிலால் மக்கள் கொதிப்பு !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில...

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...