குடியுரிமை சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்திவிட்டதாக உள்துறை அமைச்சகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
2019 ஆண்டு நாடாளுமன்ற அவைகளில் உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட சட்டத்தை அமல்படுத்திய போது இந்தியா முழுவதும் தொடர் சாஹீன்பாக் பாணியிலான போராட்டங்கள் வெடித்தன.
இதனிடையே கொரோனா பரவல் காரணமாக போராட்டங்களை முடித்து கொண்டனர். பெரும்பாலான அரசியல் கட்சிகளின் அழுத்தங்களால் கிடப்பில் போடப்பட்ட சட்டமான சிஏஏவை தூசிதட்டி நேற்று மாலை அதிரடியாக நாடு முழுமைக்கும் அமல்படுத்தியது ஒன்றிய அரசு.
இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், ஒரு நாட்டின் குடியுரிமை தொடர்பான முடிவை மாநில அரசாங்கங்கள் எடுக்க இயலாது என்ற போக்கில் செயல்பட்டுள்ள ஒன்றிய அரசின் கொடுங்கோல் தன்மையை முறியடிக்கும் விதமாக இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இதன் ஒரு பகுதியாக மனித நேய ஜனநாயக கட்சியின் அதிராம்பட்டினம் கிளை இன்று 12.03.2024 மாலை 7மணியளவில் அதிரை பேருந்து நிலையத்திலிருந்து போராட்டத்தை துவக்க உள்ளதாக தெரிவித்திருக்கிறது.
சமூக ஊடகங்களில் அதன் பொறுப்பாளர்கள் இந்த போராட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு பகிர்ந்து வருகின்றனர்.
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





