அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் இப்பகுதி வெகுவாக பாதிக்கப்படுவது வாடிக்கை.
இதே கடந்த நள்ளிரவில் கொட்டித்தீர்த்த கனமழையினால் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளதாக பெண்மனி ஒருவர் கூறுகிறார்.
கடந்த காலங்களில் மழைநீர் அருகாமையில் உள்ள திடலை கடந்து வாய்க்காலில் சென்றடையும், ஆனால் தற்பொழுது அருகாமையில் உள்ள பள்ளிவாசல் நிர்வாகம் திடலை மேம்பாடு செய்திருக்கிறது.
இதனால் அவ்வப்போது பெய்யும் மழை நீர் ஓடவும் முடியாமல் ஒதுங்கவும் முடியாமல் அருகாமையில் உள்ள வீடுகளுக்குள் தஞ்சமடைகிறது.
நள்ளிரவு பெய்த கடும் மழையினால் தமது வீட்டிற்குள் மழை நீர் புகுந்துள்ளதால் படுக்கக்கூட இடமின்றி தவிப்பதாக தீனுன் நிசா என்ற சகோதரி தெரிவிக்கிறார்.
மேலும் கவுன்சிலர் மன்சூரின் கவனத்திற்கு பலர் இந்த விவகாரத்தை எடுத்து சென்றும் பலனில்லை என்பதால்.
நகர்மன்ற தலைவரின் கவனத்திற்கு எடுத்து சென்றிருக்கிறார்.
ஆனால் இதுவரையில் எந்த அதிகாரியும் எங்களை சந்திக்கவில்லை என்றும் அவர்களை சந்திக்க இப்பகுதி மக்களை ஒன்று திரட்டி நகராட்சியை முற்றுக்கையிட செல்ல உள்ளதாக தீனுன் நிசா தெரிவிக்கிறார்.