பட்டுக்கோட்டை அருகாமையில் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளியில் மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் பேட்டிற்கு பதிலாக தென்ன மட்டையை பயன்படுத்தி கிரிக்கெட் விளையாடினார்கள் அதனைக் கண்ட மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த பொறியாளர் SMR .முகமது முகைதீன் அவர்கள் அரசு பள்ளிக்கு ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு அவர்களிடம் பள்ளிக்கு என்ன தேவை என்று கேட்டார்.
பள்ளிக்கு மின்விசிறி மிக தட்டுப்பாடாக உள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு உள்ள அமர்ந்து படிப்பதற்கு சிரமமாக உள்ளது என்று அவர்கள் கூறவே ரூபாய் 20 ஆயிரம் மதிப்புள்ள மின்விசிறி அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இந்த அன்பளிப்பில் அவரது உறவினர் மல்லிப்பட்டினம் சமுதாய நல மன்ற தலைமை குழு உறுப்பினர் தையுப், அவரது அண்ணண் SMR.ஷாஹுல் மற்றும் மல்லிப்பட்டிணம் வழக்கறிஞர் S. ஹாஜா சிகாபுதீன் உடன் இருந்தார் இந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் SMR.முகமது மைதீன் அவர்களுக்கு பொன்னாடை போற்றி நினைவு மடல் ஒன்றை வழங்கிய மரியாதை செலுத்தினார். பிறகு அவர் சிறிய உரை நிகழ்த்தினார்.
