அதிரை SSM குல் முஹம்மது நினைவு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் சார்பாக 29 ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் பல்வேறு ஊர்களில் இருந்து தலைசிறந்த அணிகள் பங்கு கொண்டு விளையாடி வருகின்றனர். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டி 2 – 2 என கோல் கணக்கில் சமநிலையில் முடிந்ததால் மீண்டும் இப்போட்டி வேறொரு நாளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று 21.05.2025 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இத்தொடரின் 8 வது போட்டியில் அதிரை AFFA – VVFC மனச்சை அணிகள் மோதினர்.
ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய அதிரை AFFA அணி, போட்டி துவங்கிய சில நிமிடங்களிலேயே அடுத்தடுத்து இரு கோல்களை அடித்து முன்னிலை வகித்தது. இதன்பின்னர் இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தின் இடையில், VVFC மனச்சை அணி ஒரு கோல் அடித்ததும் ஆட்டம் விறுவிறுப்பை எட்டியிருந்தாலும், AFFA அணி வீரர்களின் கூட்டு சாமர்த்திய முயற்சியின் பலனாக மீண்டும் அடுத்தடுத்து இரு கோல்களை அடித்து 4 – 1 என கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றதன் மூலம் AFFA அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.