அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு!
அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால சர்ச்சையில் இன்று தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் விரிவான மனு அளிக்கப்பட்டது. இந்த மனு சிறுபான்மை கல்வி நிறுவனத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவும், உள்ளூர் அரசியல் தடைகளை அகற்றவும் கோருகிறது. மனுவின்
முக்கிய கோரிக்கைகள்
மனுவில்,அன்றைய பேரூராட்சி தற்போதைய நகராட்சி நிர்வாகம் வழக்கு தொடுத்ததால் பள்ளி பழைய இடத்திலிருந்து வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து செயல்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பழைய இடம் குத்தகை அடிப்படையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிய நிலையில், அதனை கிரயமாகப் பெற அன்றைய ஆட்சியர் சிபாரிசு கடிதம் வழங்கியிருந்தார். இந்த சிபார்சை செயல்படுத்துவதை உள்ளூர் அரசியல் புள்ளிகள் தடுக்கும் நோக்கில் செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பின்னணி மற்றும் சர்ச்சை
இமாம் ஷாஃபி பள்ளி சிறுபான்மை சமூகத்தின் கல்வி முன்னேற்றத்திற்கு பங்களித்து வருகிறது. நகராட்சி அதன் நிலத்தை கையகப்படுத்த முயன்றதால் உயர் நீதிமன்றத்தில் இடைக்கால தடை உத்தரவு பெறப்பட்டது.
எதிர்கால விளைவுகள்.
இந்த மனு ஆட்சியரின் தலையீட்டால் பள்ளியின் பழைய இடத்தை மீட்பதற்கும், குத்தகை நீட்டிப்பு அல்லது கிரய விற்பனைக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,மேலும் தேர்தல் நெருங்கும் இத்தருணத்தில் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே 2026 தேர்தலில் கனிசமான வாக்குகளை பெற வழிவகுக்கும் என்றும், அம்மாபட்டினம் தொடர்ந்து அதிராம்பட்டினத்திலும் மக்கள் வீரகத்தி அடைந்த நிலையில் திமுக இதனை பரிசீலித்தால் நலன் பயக்கும் என உபிக்கள் கூறி வருகிறார்கள்.











