Sunday, February 1, 2026

நீதித்துறையில் ஆளும் பாஜகவின் சிலீப்பர் செல்களா??!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:- இந்திய நீதிமன்றமும்,நீதிபதிகளும் உலகரங்கில் சிறப்புவாய்ந்த தீர்ப்புகளை கொடுத்த வரலாறு உண்டு.ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நீதிபதிகளின் தீர்ப்புகளும்,நீதிபதிகளும் பெரும் சர்ச்சையாகி வருகிறது.இதற்கு அரசின் நிர்ப்பந்தம் என்று உச்சநீதிமன்ற நான்கு நீதிபதிகளே வரலாற்றில் முதல்முறையாக செய்தியாளர் சந்திப்பை ஏற்படுத்திய நிகழ்வு அனுதினமும் கோர்ட் வாயிலேயே தீர்ப்புக்காகவும்,நீதிக்காவும் காத்துகிடந்த பொதுமக்களுக்கு இடிவிழுந்தது.

மக்கா மசூதியில் குண்டுவெடித்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட அசிமானந்தா உட்பட குற்றவாளிகளை NIA நீதிமன்ற நீதிபதிகள் விடுதலை செய்தனர். பல அழுத்தங்கள் இருப்பதாக நீதிபதிகளே கூறினர்,மேலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ராவை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தன.அவர் ஆளும் பாஜகவின் அரசிற்கு ஆதரவாக செயல்படுவதாக என்ற பிரதான குற்றச்சாட்டை மறைமுகமாக வைத்து எதிர்த்தன.

அதற்கு பிறகு கொலிஜீயம் உத்தரவிட்டும் கேரளாவை சார்ந்த உத்திரகாண்ட் உயர்நீதி மன்ற நீதிபதி ஜோசப்பை உச்சநீதிமன்ற நீதிபதியாக்க விடாமல் அரசு தடுக்கிறது, காரணம் பாஜகவிற்கு எதிராக நியாயத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கினார் என்பதும்,அவர் சார்ந்த மதம் என்பதே ஆகும்.

இந்த விளையாட்டு,குழப்பங்கள் யாவும் மத்தியில் தான் என்றால் தமிழகத்திலும் அதே குழப்பமே நீடிக்கிறது, பன்னீர்செல்வம் தகுதிநீக்க வழக்கை தள்ளுபடி செய்கிறது,அதே சமயத்தில் கடந்த மாதம் புதுச்சேரியில் பாஜக நியமன எம்எல்ஏக்கள் செல்லும் என்ற உத்தரவை பிறப்பித்தது, இதனால் பொதுமக்களுக்கு பெரும் குழப்பம்,தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மீம்ஸ்களும் வந்த வண்ணமே இருக்கிறது.

அதே சமயத்தில் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு தீர்ப்புக்காக இன்னும் நிலுவையில் உள்ளது, அந்த தொகுதியில் எம்எல்ஏக்கள் யார் என்றே தெரியாமல் போய்விடும் அளவிற்கு இருக்கிறது.

இதில் இந்திரா பானர்ஜி இன்று அறிவிப்பு வெளியிட்டார் அதாவது மனசாட்சி படி தான் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன,கடவுளுக்கு பயந்து தான் என்றும், அந்த மனசாட்சி,கடவுள் யார் என்றும் சமூக வலைதளத்தில் விவாதமாகி வருகிறது.

இன்று காலையில் அய்யாக்கண்ணு அவர்கள் தொடர்ந்த வழக்கில் காலையில் மெரினாவில் போராட்டத்திற்கு அனுமதி என்று தீர்ப்பு வழங்கப்படுகிறது, அதேவேலையில் மாலை 7 மணிக்கு மெரினாவில் போராட தடை என்று தீர்ப்பு வழங்குகிறது. மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது.

மக்களின் மனநிலை மறுபடியும் பழமைக்கே திரும்பிவிட வேண்டும், பஞ்சாயத்து,நாட்டமை,சொம்பு என்றே நமக்கு ஞாபகம் வருகிறது..

முகமது அசாருதீன்.H

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தலையாரி குளம் தந்த வள்ளல்: N.K.S. அப்துல் ரஜாக் அவர்களின் வரலாற்றுப்...

ஆக்கம் - அதிரை அப்துல் காதர், அதிரை அமீன். அதிரையின் பெருமை 'கௌரவ மாஜிஸ்திரேட்' (HONORRY MAGISTRATE) N.K.S.அப்துல் ரஜாக் அவர்கள் இன்று 'சமூக புற்றுநோய்...

நோன்புக் கஞ்சி எனும் அமிர்தம்!-கவியன்பன்கலாம்

கொஞ்சமாக ஒரேயொரு குவளைக்குள் அரிசி……கொஞ்சமாக வெந்தயமும் கடலையான பருப்பும்துஞ்சப்போ குமுன்பாக தண்ணீரில் ஊற……..தொடர்ந்துவரும் அந்திப்பொழுதில் அக்கலவை கழுவுஇஞ்சிபூண்டு விழுதாக அரைத்தாக வேண்டும்…….இரண்டிரண்டு வெங்காயம்...

விடியல் இல்லா சிறைவாசம் : வேதனைப்படும் இஸ்லாமிய மக்கள்!!

தமிழகத்தில் 20 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவது...
spot_imgspot_imgspot_imgspot_img