Wednesday, February 4, 2026

அதிரையிலிருந்து சென்னை செல்லும் தனியார் பேருந்து கட்டண உயர்வா..!?

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிரையிலிருந்து சென்னை செல்லும் பேருந்து கட்டணம் திடீர் உயர்வு, பண்டிகை காலத்தை குறிவைத்து தாக்கும் பேருந்து உரிமையாளர்கள், மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிராம்பட்டினம் பகுதிகளில் முஸ்லிம் சகோதரர்கள் மற்றும் குடும்பத்தார்கள் சென்னையில் பலர் வசித்துக்கொண்டும் சிலர் வேலை செய்துகொண்டும் இருக்கின்றார்கள்.குறிப்பாக அதிரையிலிருந்து சென்னைக்கு வியாபார ரீதியில் வணிகம் அதிகமாகவே தொடர்பு இருந்து வருகிறது.

இதற்காக அதிரை வாசிகள் சென்னை செல்வதற்கும் , சென்னையிலிருந்து அதிரை வருவதற்கும் பெரும்பாலும் தனியார் சொகுசு பெருந்துகளையே தேடி செல்கின்றனர்.இப்படி இருக்கின்ற சூழ்நிலையில் தற்பொழுது ரமலான் மாதத்தை குறிவைத்து தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கிடுகிடுவென்று இரு மடங்கு பயண சீட்டு விலையை உயர்த்தி கொள்ளையடிக்கின்றனர்.

பொதுமக்களில் ஒருவராகிய கூறுகையில் பெருநாளுக்கு பிறகு சென்னை செல்வதற்கு அதிரை நடுத்தெரு பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பேருந்து அலுவலகத்திற்கு சென்று பயண சீட்டு முன்பதிவு செய்வதற்கு சென்றுள்ளார் அந்த அலுவலகத்தில் பயண சீட்டின் விலை பழைய விலையை விட அதிகமான விலையை சொல்லியுள்ளார் அலுவலகத்தில் பணிபுரிபவர்.

பயண சீட்டின் அதிக விலையை காதில் கேட்டவுடன் சற்று திகைத்து போய் விட்டது என்று அவர் கூறினார்.

அதிகம் கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்தின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர். ஆகையால் முறையான நடவடிக்கை எடுத்து சாதாரண பயண சீட்டின் விலையை மட்டும் நிர்ணையித்து விற்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img