Friday, March 20, 2026

பரபரப்புக்கு மத்தியில் காயலை வீழ்த்தி நாகூர் பைனலுக்கு முன்னேற்றம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் நடத்தும் 15 ம் ஆண்டும் மாநில அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது.

பல்வேறு அணிகள் கலந்து கொண்டு லீக் மற்றும் நாக் அவுட் சுற்றுகளில் வெளியேறிய நிலையில் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் நாகூர் – காயல்பட்டினம் அணிகள் மோதின.

பைனலுக்கு முன்னேறும் உத்வேகத்துடன் இரு அணிகளும் கோல் அடிப்பதற்காக ஆயத்தமானர்.

இருப்பினும் முதல் பகுதி நேர ஆட்டத்தில் காயல்பட்டினம் அணி முதல் கோலை அடித்தது.

பின்னர் தொடர்ந்து இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில் கடுமையாக போராடிய நாகூர் அணி முதல் கோலை அடித்ததும் ஆட்டம் உச்ச கட்டத்தை அடைந்தது.

இரு அணியும் மாறி மாறி கோல் அடிப்பதற்கான முயற்ச்சிகளில் முந்திக் கொள்ள ரசிகர்களின் கரகோஷமும் வீரர்களை மேலும் உத்வேகப்படுத்தியது.

ஆட்டத்தின் கடைசி 5 நிமிடங்களில் நாகூர் அணி தனது அடுத்த கோலை அடித்தது.

இறுதியாக நாகூர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த காயல்பட்டினம் அணியை சாய்த்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

நாளைய தினம் தூத்தூர் கன்னியாகுமரி – நாகூர் அணிகள் இறுதிப் போட்டியில் மோதுகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img