Thursday, February 5, 2026

வாகனதிருட்டு வழக்கில் அதிரை இளைஞர் கைது !

spot_imgspot_imgspot_imgspot_img

திருத்துறைப்பூண்டி அருகே வாகன சோதனையில் பைக் திருட்டில் ஈடுபட்ட நான்கு வாலிபர்களை போலிசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 12 பைக்குகள் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் திருட்டு நடைபெறுவதாக போலிசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது.

ஆனால் இரு சக்கர வாகனத்தை திருடுபவர்கள் குறித்து எந்த துப்பும் கிடைக்காதநிலையில், திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் பைபாஸ் சாலையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர் அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக இரண்டு இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்ற நான்கு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் முத்துப்பேட்டை புதுத்தெருவை சேர்ந்த ஆகாஷ் (19) , கொய்யாதோப்பு வினோத் (22) , அதிராம்பட்டினத்தை சேர்ந்த முகமது அசின் (22) , முத்துப்பேட்டை பேட்டை வாசீம்கான் (23) என்பதும் இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளிலும் , நாகை மாவட்ட பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் பைக் திருடியதும் தெரிய வந்தது.

இதனையடுத்து நான்கு பேர் அளித்த தகவலின் பேரில் 12 இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவர்கள் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img