Thursday, February 5, 2026

திருச்சி அருகே லாரி-கார் மோதி பயங்கர விபத்து.. 8 பேர் பலி..!

spot_imgspot_imgspot_imgspot_img

திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 2 குழந்தைகளும் அடங்கும். மேலும் 4 பேர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையிலிருந்து திருச்சி நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அந்த காரில் 12 பேர் பயணம் செய்தனர். சமயபுரம் சுங்கச்சாவடி அருகே கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

அதனால் தறிகெட்டு சாலையில் இங்குமங்கும் ஓடியது. அப்போது, ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து ஸ்டீல் லோடு ஏற்றிய லாரி அங்கு நின்று கொண்டிருந்தது. அந்த லாரி மீது வேகமாக வந்த கார் பலமாக மோதியது.

இதில் கார்பயங்கர சத்தத்துடன் சுக்குநூறாக நொறுங்கியது. காருக்குள் 2 குழந்தைகள், பெண்கள் என 8 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்து நிகழ்ந்த இடத்தில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். உயிருக்கு போராடியவர்களை உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவலறிந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img