மரண அறிவிப்பு : கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ம.செ. சேக்தாவூது அவர்களின் மகனும், மர்ஹூம் முஹம்மது யாசின் அவர்களின் மருமகனும், மர்ஹூம் ம.செ. ஹமீது சுல்தான் அவர்களின் தம்பியும், மர்ஹூம் அ.மு. அப்துல் கரீம், அ.மு. அப்துல் அஜீஸ், அ.மு. அப்துல் ரஜாக், அ.மு. அப்துல் சமது ஆகியோரின் சகோதரரும், A.M. அகமது முணாஸ், A.M. ஆதம் மாலிக், A.M. அப்துல் மவுஜித் ஆகியோரின் தகப்பனாரும், S.M. முஹம்மது மீரா, S.M. முஹம்மது சித்தீக் ஆகியோரின் மாமனாருமாகிய ஹாஜி. அ.மு. அப்துல் மதீனா அவர்கள் இன்று காலை ஹாஜா நகர் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4.30 மணியளவில் கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.








