Saturday, March 21, 2026

உருவானது அதிமுக-பாமக கூட்டணி !

spot_imgspot_imgspot_imgspot_img

லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக மற்றும் பாமக நடுவே கூட்டணி உறுதியாகியுள்ளது. தொகுதி பங்கீடுக்கான ஒப்பந்தம் சென்னையில் இன்று கையெழுத்தானது.

பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கு பாமகவை எப்படியாவது அழைத்து வந்து விட வேண்டும் என்பதில் இரு கட்சிகளும் தீவிரமாக இருந்தன.

இதையடுத்து அன்புமணி ராமதாஸ் மூலமாக பாமக நிறுவனர் ராமதாசுக்கு தூதுவிட்டது பாஜக தலைமை. இந்த நிலையில் சென்னையில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அதிமுக தேர்தல் பணிக் குழுவை சேர்ந்த அமைச்சர் தங்கமணி பேச்சுவார்த்தை நடத்தினார்.

கடந்த வாரம் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அதிமுக அமைச்சர்கள் தங்கமணி உள்ளிட்டோர் உடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி விட்டு சென்ற நிலையில், இன்று ராமதாசுடன் தங்கமணி ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து, சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரை, ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சந்தித்தனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதிமுக தலைவர்களுடன் டாக்டர் ராமதாஸ் நேரடி சந்தித்தனர். ராமதாஸுக்கு பொன்னாடை போர்த்தினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அன்புமணிக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் பொன்னாடை போர்த்தினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இதையடுத்து, அதிமுக-பாமக நடுவே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img