Home » மல்லிப்பட்டிணத்தில் தீவிபத்து, குடிசை எரிந்து நாசம்,துரிதமாக செயல்பட்ட இளைஞர்கள்…!

மல்லிப்பட்டிணத்தில் தீவிபத்து, குடிசை எரிந்து நாசம்,துரிதமாக செயல்பட்ட இளைஞர்கள்…!

by admin
0 comment

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் தீவிபத்து குடிசைகள் எரிந்து நாசமாயின.

மல்லிப்பட்டிணம் கடற்கரை அருகில் யாகூப் கம்யூனிகேஷன் கடை எதிரே வசித்து வருபவர் ராணி.இவர் குடிசையில் வசித்து வருகிறார்.இவர் இன்று (பிப் 19) மதிய உணவு சமைத்து கொண்டிருந்தார்.வீட்டிற்கு அருகில் அமர்ந்து பேசி கொண்டிருந்த நிலையில் வீட்டில் இருந்து தீ எரிய ஆரம்பித்து மடமடவென்று தீ முழுவதுமாய் பரவி குடிசை முழுவதும் எரிந்து நாசமாயின.இதில் அரசு ஆவணங்கள்,பொருட்கள் எல்லாம் எரிந்து சாம்பலாகி போனது.

ஜாஸ் மற்றும் SRM என்ற தனியார் குடிநீர் விற்பனை வாகனத்தில் உள்ள நீரை தீயை அணைக்க இளைஞர்களுக்கு வாகன ஓட்டுனர் இலவசமாக கொடுத்து மற்ற குடியிருப்புகளில் தீ பரவாமல் தடுக்க பெரும் உதவியாக இருந்தார்.

தீயை அணைக்க துரிதமாக செயல்பட்ட குடிநீர் விற்பனை வாகன ஓட்டுனருக்கும்,இளைஞர்களுக்கும் அப்பகுதி மக்கள் பாரட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

ஏதுமின்றி நிராயுதபாணியாய் நிற்கும் ராணி கஜா புயலாலும் ஏற்கனவே ராண பாதிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.அவருக்கு தன்னார்வ,தொண்டு அமைப்புகள் உதவிட வேண்டும் என்பதும் அவரின் கோரிக்கையாக இருக்கிறது.

 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter