Friday, March 20, 2026

அதிமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் கிணத்துக்கடவு தாமோதரன் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிமுகவின் சீனியர்களில் ஒருவர் கிணத்துக்கடவு தாமோதரன். கோவை மாவட்ட அதிமுக நிர்வாகிகளில் மிகவும் முக்கியமானவர்.

அதிமுக சார்பில் 3 முறை எம்எல்ஏ, ஒரு முறை அமைச்சர் பொறுப்புகளை வகித்தவர். கட்சி இரண்டாக பிரிந்ததும், ஓபிஎஸ் அணியில் வந்து சேர்ந்தார். ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுகவில் இருந்து விலகி, டிடிவி தினகரனின் அமமுக கட்சியில் இணைந்தார்.

இதற்கு அப்போது அவர் சொன்ன காரணம், “ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த பலரும் டம்மியாகத்தான் இருக்கிறார்கள். எங்களுக்கு கட்சியில் மரியாதை இல்லை. அதனால்தான் டிடிவியிடம் வந்து சேர்ந்தேன்” என்றார்.

ஆனால் முழுசா 6 மாசம்கூட முடியவில்லை. இந்நிலையில், அமமுகவிலிருந்து விலகி மீண்டும் அதிமுகவிலேயே இணைந்துள்ளார். இதற்கு இப்போது அவர் சொல்லும் காரணம், தினகரனின் செயல்பாடுகள் பிடிக்கவில்லையாம்.

அதிமுகவுக்கு நல்ல நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. அதனால்தான் தாமோதரன் இங்கு வந்து மீண்டும் சேர்ந்துள்ளார். டிடிவி தினகரன் பக்கம் இருப்பவர்கள் திமுகவுக்கு செல்வது போய் இப்போது அதிமுகவுக்கும் வர ஆரம்பித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img