Saturday, March 21, 2026

பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் நடைபெறும் வீடுகள் வழங்கும் விழாவில் பங்கேற்க அழைப்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

கடந்த வருடம் நவம்பர் மாதம் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் தீவிரமாக தாக்கியது. புயலால் பல்வேறு பகுதிகளில் இருந்த மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர்.

அதனைத்தொடர்ந்து தஞ்சை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் 125 வீடுகள் புணரமைப்புக்கு தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் புணரமைக்கப்பட்ட வீடுகளை உரிமையாளர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி நாளை 08.03.2019 வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் அதிரை பவித்ரா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில தலைவர் M முகம்மது இஸ்மாயில் மற்றும் மாநில பொதுச்செயலாளர் A. ஹாலித் முகமது ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

மேலும் SDPI மாநில செயலாளர் A. அபுபக்கர் சித்தீக், சம்சுல் இஸ்லாம் சங்கச் செயலாளர் A. முகம்மது அப்துல் காதர், ஆசாத் நகர் ஜூம்மா பள்ளி தலைவர் A. நெய்னா முகம்மது, AJ ஜூம்மா பள்ளி தலைவர் A.M.K. முகம்மது அமீன் மற்றும் கடற்கரைத்தெரு ஜூம்மா பள்ளி இணைச்செயலாளர் P.L.A. அப்துல் மாலிக் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

இந்த வீடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img