Sunday, March 22, 2026

தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரிய அதிரை திமுகவினர் !!

spot_imgspot_imgspot_imgspot_img

நாடாளுமன்றத் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான திமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் அங்கம் வகித்துள்ளனர். மேலும் இக்கூட்டணிக்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இக்கூட்டணியின் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் S.S. பழனிமாணிக்கம் போட்டியிடுகிறார். இவரின் வெற்றிக்காக திமுகவினரும், கூட்டணி கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக அதிரை TNTJ நிர்வாகிகளை, திமுகவினர் சந்தித்து SS. பழனிமாணி க்கத்திற்கு ஆதரவு கோரினர். அதிரை ஈசிஆர் சாலையில் உள்ள தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற சந்திப்பில், அதிரை பேரூர் திமுக செயலாளர் இராம. குணசேகரன், முன்னாள் சேர்மன் அஸ்லம் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளிடம் ஆதரவு தர கோரினர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img