Monday, February 2, 2026

பனை ஓலையா.. பானை ஓலையா.. டங் ஸ்லிப் ஆன ஸ்டாலின்.. கலாய்க்கும் நெட்டிசன்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

பார்த்து பார்த்துதான் படிக்கிறார்.. ஆனாலும் டங்க் ஸ்லிப் ஆகி ஏதாவது ஏடாகூடமாகி விடுகிறது திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு !

தமிழக பிரச்சாரங்கள் இறுதி கட்டத்தை எட்டி வருகின்றன. இதில் பல இடங்களில், பல கட்சி சார்பாக நடந்த பிரச்சாரங்களில் உளறல்கள் நிறைய நடந்தது.

கட்சி பெயர், வேட்பாளர் பெயர், சின்னம் பெயர் என எல்லாவற்றையுமே மாற்றி மாற்றி சொல்லி சம்பவங்கள் நடந்தன! இந்த லிஸ்ட்டில் திமுக தலைவர் ஸ்டாலினும் சேர்ந்துள்ளார்.

சமீபத்தில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு ஆதரவாக பிரச்சாரம் அவர் பிரச்சாரம் செய்தார். அப்போது, கையில் வழக்கம்போல் எழுதி வைத்த பேப்பர் இருந்தது. அதை பார்த்து பார்த்துதான் படித்தார்.

அப்போது, “மண்பானைக்கு வரலாற்றில் ஒரு தனிச்சிறப்பு உண்டு. “பானை” ஓலைகளில் எழுதுவது என்பது “கற்களில்” எளிய மக்களுக்கு எட்டாத செயல். அதனால்தான் எளிய மக்கள் பானைகளில் எழுதி வைத்தார்கள்” என்றார்.

அதாவது “பனை ஓலை” என்பது பானை ஓலையாகிவிட்டது, கற்காலங்களில் என்பது “கற்களில்” என்று ஆகிவிட்டது. இவை வாய் தவறிய சொல்லிவிட்ட வார்த்தைகள் என்றாலும், இதனை வீடியோவாக எடுத்து நெட்டிசன்களும் வைரலாக்கி வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img