இந்திய அரசியலைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் 128வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெரு கிராமவாசிகளால் அவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.
கிராம தலைவர் வி. ஜெயமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சி அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இறுதியாக நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.