Sunday, February 1, 2026

உயிர்காக்கும் நீச்சல் பயிற்சியை 12 நாட்களில் கற்றுக் கொள்ள, சிறப்பு பயிற்சி வகுப்பிற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது!!

spot_imgspot_imgspot_imgspot_img

 

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெரிந்து வைத்திருக்க வேண்டிய, நீச்சல் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
மழை வெள்ளம் பெருக்கெடுத்தால் தன்னுயிரை மட்டுமல்ல மற்றவர்கள் உயிரையும் காக்க உதவும் கடவுள் நீச்சல்..! அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அற்புதமான வித்தை நீச்சல்..!
உடலுக்கும், உள்ளத்துக்கும் நல்ல ஆரோக்கியத்தை தரும் நீச்சல் பயிற்சியை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அவரை எளிதாக கற்றுக் கொள்ள சென்னை மாநகராட்சி நீச்சல்குளங்களில் சிறப்பு பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெரீனா நீச்சல்குளம், செனாய் நகர் நீச்சல் குளம், வேளச்சேரி நீச்சல்குளம் ஆகிய இடங்களில் ஒரு பிரிவுக்கு 20 பேர் வீதம் தினமும் காலை மாலை என மொத்தம் ஒவ்வொரு நீச்சல் குளத்திலும் 80 பேருக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகின்றது. ஆர்வத்துடன் ஏராளமான சிறார்கள் பங்கேற்றனர்.
நீச்சல் பயிற்சிக்கு அழைத்து வந்த பெற்றோர், உயிர்காக்கும் நீச்சல் பயிற்சி ஒவ்வொரு குழந்தையும் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டியது என தெரிவித்தனர்
நீச்சல் பயிற்சியால் சுவாசக் கோளாறு நீங்குகிறது என்றும், உடலில் வீணான கொழுப்பு கரைந்து உடல் கட்டுக்கோப்பாக மாறும் என்றும் நீச்சல் பயிற்சியாளர் ப்ரீத்தி தெரிவித்தார்
12 நாட்கள்  நடைபெற உள்ள இந்த நீச்சல் பயிற்சியில் 6 வயது முதல் 80 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்கலாம். எனவே தண்ணீரில் நீச்சல் கற்று உடல் பருமனுக்கு எதிராக எதிர் நீச்சல் அடிப்போம் வாருங்கள்..!

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img