Monday, February 2, 2026

தொடரும் மணல் கொள்ளை.. நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியல் !

spot_imgspot_imgspot_imgspot_img

கடந்த நான்கு மாதங்களுக்கு மேல் ராஜாமடம் பாலத்திற்கு அருகே சட்ட விரோதமாக லாரிகள் மூலம் மணலை ஏற்றி செல்கின்றனர்.இதனை கண்டித்து பல முறை அதிகாரிகளிடத்தில் புகாரளித்தும் எவ்வித நடவடிக்கை இல்லை என்றும், அதிவேகத்தில் செல்லும் இந்த லாரிகள் மூலம் பல விபத்துகள் நடந்துள்ளன என்று பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

இந்நிலையில் இன்று(17.7.2019) சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த லாரி பாலத்தின் தடுப்புச் சுவரை சேதப்படுத்தி உள்ளது. இதனை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்துவருகின்றனர்.

ஏற்கனவே மணல் கொள்ளை தொடர்பாக அதிரை எக்ஸ்பிரஸில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. மணல் கடத்தல் தொடர்பாக தொடர்ந்து அதிகாரிகளிடத்தில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img