Thursday, March 19, 2026

வேலூர் தொகுதி தேர்தல் – எம்பி வைத்திலிங்கம் தலைமையில் களப்பணியாற்றும் அதிரை அதிமுகவினர் !

spot_imgspot_imgspot_imgspot_img

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்ததன் காரணமாக வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது அங்கு ஆகஸ்ட் 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதனால் தமிழக அரசியல் கட்சிகள் வேலூரில் முகாமிட்டுள்ளன. அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அதிமுக முன்னணி தலைவர்கள், அமைச்சர்கள் என பலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வேலூரில் ஏ.சி. சண்முகத்திற்கு ஆதரவாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைத்திலிங்கம் தலைமையில் அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகளும் தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் தலைமையில் பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் பி. சுப்ரமணியம், அதிராம்பட்டினம் நகர செயலாளர் பிச்சை, அதிராம்பட்டினம் நகர துணை செயலாளர் முஹம்மது தமீம், லியாக்கத் அலி, சம்சுதீன், சம்சுல் ஹக், சலாம் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

மேலும் திமுகவில் இருந்து விலகிய இளைஞர்கள் சிலர் எம்பி வைத்திலிங்கம் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img