Monday, February 2, 2026

சீக்கியர்களை வரவேற்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்….!

spot_imgspot_imgspot_imgspot_img

சீக்கிய யாத்ரீகர்களை வரவேற்க கர்தார்பூர் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக், தமது கடைசி காலத்தை பாகிஸ்தானின் நரோவால் மாவட்டத்திலுள்ள கர்தார்பூரில் கழித்தார். இதன் நினைவாக அங்கு கட்டப்பட்டுள்ள குருத்வாராவுக்கு சீக்கியர்கள் புனித யாத்திரை செல்வது வழக்கம்.

இந்தியாவிலுள்ள சீக்கியர்கள் விசா இல்லாமல் செல்லும் வகையில் கர்தார்பூர் குருத்வாராவுக்கும், இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்திலுள்ள குருத்வாராவுக்கும் இடையே வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடம்,  நவம்பர் 12ம் தேதி திறந்து வைக்கப்படவுள்ளது.
இதையொட்டி, ட்விட்டரில் இம்ரான் வெளியிட்ட பதிவில், குருநானக்கின் 550ஆவது பிறந்ததின கொண்டாட்டத்துக்கு சீக்கிய யாத்ரீகர்களை வரவேற்க கர்தார்பூர் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...

துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது. தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...
spot_imgspot_imgspot_imgspot_img