Monday, March 23, 2026

அதிரையில் டெங்கு விழிப்புணர்வு பேரணி – எம்எல்ஏ சி.வி.சேகர் பங்கேற்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் பட்டுக்கோட்டை எம.எல்.ஏ. சி.வி. சேகர் பங்கேற்று தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற உறுப்பினர் சுப்பரமணியம், அதிராம்பட்டினம் பேரூராட்சி மன்ற முன்னாள் துணை தலைவர் பிச்சை, அதிரை பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அன்பரசன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில் டெங்கு தடுப்பு பற்றிய பதாகைகளுடன் மாணவ, மாணவிகள் பேரணியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் டெங்கு தடுப்பு பற்றிய உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.

பிறகு பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img