Monday, March 30, 2026

துப்புரவுப் பணியாளர் குடும்பங்களுக்கு அதிரை தமுமுக நிவாரண உதவி!! (படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

ஒட்டு மொத்த உலகையே உராய்ந்து கொண்டிருக்கும் சீனாவில் பிறந்த கொரோனா எனும் கொடிய வைரஸ், இத்தாலிக்குப் பின் இந்தியாவில் வலம் வந்துக் கொண்டிருக்கிறது.

நாடு முழுவதும் நாளுக்கு நாள் பவனி வரும் இந்த கொடிய கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறைகளும் கடுமையாக போராடி வருகிறது.

கொரோனா நிவாரண உதவிகளுக்காக மத்திய மாநில அரசுகளுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் என பலரும் தங்களுடைய நிவாரண தொகையை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், அதிரை நகர தமுமுக சார்பில் அதிரை பேரூராட்சியில் துப்புரவு பணி செய்து வரும் பணியாளர்களின் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களும், முகக் கவசங்களும் வழங்கப்பட்டது.

இது குறித்து வயது முதிர்ந்த மூதாட்டி ஒருவர் கூறுகையில்,
துப்புரவு செய்வது எங்கள் தொழில் என்பதால் பலர் எங்களை ஏளனமாக பார்த்ததுண்டு. ஆனால் இஸ்லாமிய மக்கள் எங்களை அன்போடும் ஆதரவோடும் எங்களுக்கு எது நடந்தாலும், எந்நேரமாயினும் ஓடோடி வந்து உதவி செய்து வருவது எங்களுக்கு மன மகிழ்ச்சியை தருகிறது. கடந்த வருடம் ஏற்பட்ட கஜா புயலிலும் தமுமுக போன்ற அமைப்புகள் எங்களுக்கு செய்த உதவியை நாங்கள் என்றும் மறக்க மாட்டோம் என்று நாதழுத்த குரலில் கூறினார்.

இந்த கொரோனா நிவாரண பணியில் அதிரை தமுமுக புதிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் இன்று புதிய உதயம்! “ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி” திறப்பு...

அதிராம்பட்டினம்: நமது அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எவர் கோல்ட் காம்ப்ளக்ஸ் (Ever Gold Complex) வளாகத்தில், இன்று (மார்ச் 30,...

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ்...

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி...

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து  பள்ளிகள் திறக்கப்படும்!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.  பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ்...
spot_imgspot_imgspot_imgspot_img