கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஒன்றாக தஞ்சை மாவட்டம் முழுவதும் இருசக்கர வாகனத்தில் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. அதேபோல் தேவையின்றி வெளியில் சுற்றித்திரிவோர் மீது உரிய சட்ட நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தடை உத்தரவு காலத்தில் வெளியில் அவசியமின்றி சுற்றித்திரிந்த 500க்கும் மேற்பட்ட வாகனங்களை அதிரை காவல்துறை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் விதிமீறலில் ஈடுபடும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்றும் அதிகாரிகள் எச்சரித்திருக்கிறார்கள்.
More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...





