Sunday, March 29, 2026


தஞ்சை மாவட்ட முழுவதும் SDPI கட்சியினர் குடைபிடித்து போராட்டம்(படங்கள்)…

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் SDPI கட்சியினர் மத்திய மாநில அரசுகளை கண்டித்து அறவழியில் குடைபிடித்து போராட்டம்.

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலங்களில் மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்ட திட்டமிடப்படாத நடவடிக்கைகளால் ஏழை-எளிய மக்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், வெளி மாநிலங்களில் சிக்கிய மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். மற்றொரு புறம் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வு நடவடிக்கைகளும்,  தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகளும், சமூக செயற்பாட்டாளர்களை சிறையில் அடைக்கும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளும், மாநில உரிமைகளை பறிக்கும் செயல் திட்டங்களும் நடந்தேறின.

கொரோனா ஊரடங்கு நடவடிக்கையின் பெயரால் மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்ட இத்தகைய ஊரடங்கு அரசியலை கண்டித்து தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் இன்று (மே.16) அறவழி முழக்கப் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் மல்லிப்பட்டிணம், மதுக்கூர்,சேதுபவாசத்திரம் போன்ற ஊர்களில் போராட்டங்கள் நடைபெற்றன.இதில் அக்கட்சியின் மாவட்ட,நகர, கிளை நிர்வாகிகள் அந்தந்த பகுதிகளில் கலந்துக்கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ்...

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி...

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து  பள்ளிகள் திறக்கப்படும்!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.  பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ்...

திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!

1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ.,...
spot_imgspot_imgspot_imgspot_img