72
அதிராம்பட்டினம் சின்ன தைக்கால் தெருவை சேர்ந்தவர் ஹாஜா அலாவுதீன் வயது 80.
இவர் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்புவரை சஹர் நேரங்களில் தப்ஸ் வாசித்து தூக்கதில் இருப்பவர்களை எழுப்பிவிடும் சிறப்பான பணியை செய்து வந்தவர் ஆவார்.
இந்நிலையில் முதுமையின் காரணமாக அவரால் இப்பணியை தொடர்ந்து செய்திட இயலவில்லை.
முன்னதாக இவர் மரணித்தவர்களை குளிப்பாட்டுதல் முதல் குழி வெட்டுதல் வரை நேர்த்தியாக செய்து வந்த இவருக்கு உடல் ஒத்துழைக்காத காரணத்தால் அத்தொழிலை விட்டும் வெளியேறி உள்ளார்.
தற்போது வறுமையின் கோரப்பிடியில் சிக்கியுள்ள இவர் தங்களின் உதவிகளை எதிர்பார்த்து உள்ளார்.
தங்களால் ஆன உதவிகளை தாராளமாக செய்து அருள் இறங்கும் இம்மாதத்தில் நன்மைகளை பெற்றிடுவீர்.