Sunday, March 29, 2026

வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்த தமுமுக : அதிரை வியாபாரிகள் மகிழ்ச்சி!!

spot_imgspot_imgspot_imgspot_img

கொரோனாவின் கொடூர பிடியில் உலகமே சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது இந்தியாவிலும் அதனுடைய தாக்கம் அதிகரித்து வந்ததால் மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக நாடும் முழுவதிலும் பொது ஊரடங்கை அமல்படுத்தினர்.

ஊரடங்கின் போது வியாபாரிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படது. அரசு அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டும் அத்தியாவசிய கடைகளை திறக்க அனுமதியிருந்த போது சிலர் அந்த நேரங்களை தாண்டியும் கடைகளை திறந்ததால் அதிகாரிகள் கடைகளுக்கு சீல் வைத்தனர். இதனால் சிறுகுறு வர்த்தகங்கள் முடங்கின.

இதனையடுத்து அதிரை தமுமுகவின் மாநில துணைச் செயலாளர் அஹமது ஹாஜா அதிகாரிகளிடம் இதுகுறித்து பேசி சீல் வைக்கப்பட்ட கடைகளை திறந்துவிட கோரி கோரிக்கை விடுத்ததையடுத்து நேற்று (22.05.2020) புதன்கிழமை அரசு அதிகாரிகள் சீல் வைத்த கடைகளை திறந்து விட்டனர். இதனால் முடங்கிய வியாபாரிகள், அரசு அதிகாரிகளுக்கும் அதிரை தமுமுகவிற்கும் தங்களது உணர்வுப்பூர்வமான நன்றிகளை தெரிவித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ்...

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி...

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து  பள்ளிகள் திறக்கப்படும்!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.  பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ்...

திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!

1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ.,...
spot_imgspot_imgspot_imgspot_img