கொரோனாவின் கொடூர பிடியில் உலகமே சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது இந்தியாவிலும் அதனுடைய தாக்கம் அதிகரித்து வந்ததால் மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக நாடும் முழுவதிலும் பொது ஊரடங்கை அமல்படுத்தினர்.
ஊரடங்கின் போது வியாபாரிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படது. அரசு அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டும் அத்தியாவசிய கடைகளை திறக்க அனுமதியிருந்த போது சிலர் அந்த நேரங்களை தாண்டியும் கடைகளை திறந்ததால் அதிகாரிகள் கடைகளுக்கு சீல் வைத்தனர். இதனால் சிறுகுறு வர்த்தகங்கள் முடங்கின.
இதனையடுத்து அதிரை தமுமுகவின் மாநில துணைச் செயலாளர் அஹமது ஹாஜா அதிகாரிகளிடம் இதுகுறித்து பேசி சீல் வைக்கப்பட்ட கடைகளை திறந்துவிட கோரி கோரிக்கை விடுத்ததையடுத்து நேற்று (22.05.2020) புதன்கிழமை அரசு அதிகாரிகள் சீல் வைத்த கடைகளை திறந்து விட்டனர். இதனால் முடங்கிய வியாபாரிகள், அரசு அதிகாரிகளுக்கும் அதிரை தமுமுகவிற்கும் தங்களது உணர்வுப்பூர்வமான நன்றிகளை தெரிவித்தனர்.