Monday, February 2, 2026

கொரோனாவுக்கு பின் குறட்டை விடும் பேரூராட்சி…

spot_imgspot_imgspot_imgspot_img

கொரோனாவுக்கு பின் குறட்டை விடும் பேரூராட்சி !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி அருகே நீண்ட நாட்களாக குப்பை அள்ளப்பட வில்லை இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், நோய்பரவும் அபாயமும் உள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை பேரூராட்சியின் பார்வைக்கு கொண்டும் சென்றும் பலனில்லை.

அள்ளப்படாத குப்பையினால், அப்பகுதி முழுவதும் கொசுத் தொல்லையால் அவதிபடுகிறார்கள் என்றும் இப்பகுதிக்கு வெளி பகுதியில் இருந்தும் அதிகளவில் குப்பை கொட்ட வருகிறார்கள் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

எனவே பேரூராட்சி செயல் அலுவலர், துப்புரவு ஆய்வாளர் இது விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுக்கின்றனர்.

தவறும் பட்சத்தில் அப்பகுதி மக்களை ஒன்று திரட்டி ஜனநாயக வழியில் வீதியில் இறங்கி போராட உள்ளதாக அப்பகுதி தன்னார்வ அமைப்பான அய்வா தெரிவித்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img