Thursday, March 19, 2026

அதிரையில் நவீன வசதிகளுடன் கூடிய PFI ஆம்புலன்ஸ் – ஓர் அப்டேட்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாங்குவது தொடர்பாக சில மாதங்களுக்கு முன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா பொது மக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

கொரோனா லாக்டவுன் காரணமாக பல்வேறு பொருளாதார நெருக்கடிகள் இருந்த போதிலும் அதிரை மக்கள் தாங்களாக மனமுவந்து தாராளமாக நிதியுதவியளித்தனர்.

இதுவரை வசூலான தொகையில் முதற்கட்டமாக ஆம்புலன்ஸிற்கு தேவையான டெம்போ ட்ராவலர் வேன் வாங்குவதற்கான தொகையை இன்று காசோலையாக ஆம்புலன்ஸ் ஏற்பாட்டு குழு தஞ்சாவூர் தேவா ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்திடம் வழங்கியது.

நம் மக்களின் தேவையறிந்து நாங்கள் அறிவிப்பு வெளியிட்ட சில மாதங்களிலேயே ஆதரவளித்து,
நிதி தந்து உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இறைவன் அருள்புரிவானாக!

இப்போது வந்துள்ள தொகையை வைத்து முதல் கட்டமாக வேன் வாங்க காசோலை அளித்துள்ளோம். மீதத்தொகை வந்தவுடன் வேனை முழு நவீன வசதிகளுடன் ஆம்புலன்ஸாக மாற்றும் பணிகள் விரைவில் தொடங்க இருக்கின்றோம். இறைவன் நாடினால் வருகிற ஜனவரி மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

எனவே நல்லுள்ளம் கொண்டவர்கள் நிதியளித்து அதிரை மக்கள் பயன்பெறும் விதமாக அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் நமதூருக்கு விரைந்து வர உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,
ஆம்புலன்ஸ் ஏற்பாட்டு குழு
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
அதிரை.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img