Sunday, February 1, 2026

திருவாரூர்-காரைக்குடி மார்க்கத்தில் விரைந்து ரயில் போக்குவரத்தை துவங்க வேண்டும்!

spot_imgspot_imgspot_imgspot_img

முஸ்லீம்லீக் பொதுகுழுவில் தீர்மானம்!!

பட்டுக்கோட்டையில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது, இப்பொதுகுழுவில்  மாவட்ட துணைத்தலைவர் கே,கே,ஹாஜா நஜ்முதீன் தலைமையில் நடைபெற்ற இப்பொது குழுவில்,

பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதில் முதனமையானதாக விரைவில் நடக்க இருக்கும் முஸ்லீம் லீக்கின் மாநில மாநாட்டை தஞ்சை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் நடத்திட தலைமையை வலியுறுத்தியுள்ளன.

இப்பொதுகுழு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் கலந்துகொண்டு கூட்டத்தை வழி நடத்தினார். அப்பொழுது நகர,கிளை,பிரைமரி ஆகிய கிளைகள் சி\றப்புடன் செயலாற்றி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் நமது கூட்டனியின் வெற்றிக்கு பாடுபட கேட்டுகொண்டார்.

இறுதியாக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதில் திருவாரூர்-காரைக்குடி மார்க்கத்தில் விரைந்து ரயில் போக்குவரத்தை துவங்க வேண்டும்,

வருகிற  2021 ம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற உள்ள மாநில மாநாட்டை தஞ்சை தெற்கு மாவட்டத்தில் நடத்துவது என்றும்,அந்த மாநாடு வெற்றி பெற கடுமையாக பாடுபடுவது என்றும் ஏகோபித்த முஸ்லிம்லீக்கின் நிர்வாகிகள் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் மதுக்கூர் ஏ,எம், அப்துல்காதர் ஹாஜியார், மாவட்ட துணைத்தலைவர் எஸ்,எஸ், நூர்தீன், தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பி,எஸ்,ஹெச், ரபீக்தீன், தஞ்சாவூர் முன்னால் பொறுப்பு தலைவர்  எம்,ஜே, அப்துல் ரவூப், மாவட்ட செயலாளர்  அமீது சுல்தான், அதிராம்பட்டினம் நகர செயலாளர் வழக்கறிஞர் முனாப், பேராவூரணி நகர தலைவர்  சம்சுதீன், பட்டுக்கோட்டை பொறுப்பாளர் எம்,ஏ,அமானுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட செயலாளர் எஸ்,எம், ஜெய்னுல் ஆபிதீன்  நிகழ்ச்சி களை தொகுத்து வழங்கினார். இப்பொது குழுவில் பல்வேறு இயக்கங்க்களை சார்ந்த பலரும் தங்களை முஸ்லீம் லீக்கில் இணைத்துகொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img