Monday, February 9, 2026

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 87 வது மாதாந்திர கூட்டம்

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 87 வது மாதாந்திர கூட்டம்

 தேதி:23/04/2021                                             

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் உதவியால் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 87-வது மாதாந்திர கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

 நிகழ்ச்சி நிரல்:-

கிராஅத்                 : சகோ. அஹமது அஸ்ரப் ( துணை தலைவர் )

முன்னிலை           : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )

வரவேற்புரை            : சகோ. N.அபூபக்கர் ( பொருளாளர் )

சிறப்புரை              :  A.M.அஹமது ஜலீல் ( செயலாளர் )

அறிக்கை வாசித்தல்  :  சகோ. ஷேக் மன்சூர் ( துணை செயலாளர் )

நன்றியுரை                       : சகோ. P.இமாம்கான் ( கொள்கை பரப்பு செயலாளர் )

தீர்மானங்கள்:

 1) அல்ஹம்துலில்லாஹ் ரியாத் கிளையின் 87வதுமாதாந்திர  கூட்டம் இம்முறை ZOOM காணொளி மூலம் ஏழாவது முறையாக இனிதே அல்லாஹ்வின் கருணையோடு நடைபெற்று முடிந்தது. 

2) கடந்த வருடம் போல் இவ்வருடமும் ஏழைகளின் உதவி திட்டமான RAMADAN  KIT ரியாத் கிளையின் சார்பாக 56 நபர்களுக்கு ரூபாய் 1200 வீதம் வாரி வழங்கிய பெரும் உள்ளங்களுக்கு இனிதே நன்றி தெரிவித்து அவர்களுக்காக துவா செய்யப்பட்டது.

3) இவ்வருடம் ரமலானின் அமல்களில் ஒன்றான ஏழைகளுக்கு பங்கிடப்படும் ஜக்காத் நிதியை  பைத்துல்மால் மூலம் அளித்து குர்ஆன் வரையறுத்த படி ஏழைகளின் எட்டு பிரிவினர்களுக்கு சரியான முறையில் சென்றடையும். மேலும் ஏழைகளின் பலதிட்டங்களில் சேவையை மேம்படுத்தும் விதம் ஜகாத் நிதியைஅதிகமாக  அளிதிடுமாறு  கேட்டுக் கொள்ளப்பட்டது.

4) பித்ரா தொகையை நபர் ஒன்றுக்கு ரியால் 15 வீதம் நிர்ணயிக்கப்பட்டு அதற்கானபங்களிப்பை வரும் ரமலான் பிறை 25க்கு  முன்பாக பெயர்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.அதற்கு நிகரான அரிசி தலைமையகம் மூலம் சரியான நபர்களை சரியான நேரத்தில்  சென்றடையும் என்பதனையும் இக்கூட்டத்தின்  மூலம் தெளிவுபடுத்தப்பட்டது.ஏழைகளுக்கு உதவிக்கரம் நீட்டும் ABMன் பல திட்டங்களுக்கு மாதச் சந்தா வருட சந்தா நிதியினை  செலுத்தாதவர்கள். இப்புனித ரமலானில்  அதன் பொறுப்புதாரர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

5) சகோதரர் இக்பால் ( HARA )  சவுதி வாழ்க்கையை நிறைவு செய்து தாயகம் செல்ல இருப்பதால் அவருக்கு பிரியாவிடை செலுத்தி இக்கூட்டத்தில் அவர்களுக்கு நன்றி செலுத்தி ABMR ல் உறுதுணையாக செயல்பட்டமைக்கு நன்றி தெரிவித்து இதே சேவையை  ஊரில் சென்று தலைமையகம் மூலம் தொடர்பில்பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

6) இன்ஷாஅல்லாஹ் அடுத்த அமர்வு பின்னர் அறிவிக்கப்படும் கூட்டம் இனிதே நிறைவுற்றது.

ஜஸாக்கல்லாஹ் ஹைரன்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img