அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 92 வது மாதாந்திர கூட்டம் நிகழ்ச்சி தகவல்கள்
தேதி:08/10/2021
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் உதவியால் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 92-வது மாதாந்திர கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சி நிரல்:-
கிராஅத் : சகோ. முகம்மது யாகூப்
முன்னிலை : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை : சகோ. A. சாதிக் அகமது ( இணைத்தலைவர் )
சிறப்புரை : சகோ. A.M.அஹமது ஜலீல் ( செயலாளர் )
அறிக்கை வாசித்தல் : சகோ. ஷேக் மன்சூர் ( துணை செயலாளர் )
நன்றியுரை : சகோ. அஹமது அஸ்ரப் ( துணை தலைவர் )
தீர்மானங்கள்:
1) ABM பற்றிய பொது சேவை திட்டத்தின் விழிப்புணர்வு மற்றும் சதக்கா, தர்மம் பற்றிய நோட்டீஸ்களை நமதூர் ஜும்மாபள்ளிவாசல்களில் விநியோகம் செய்து அதற்கான பொருளாதார உதவி இளைஞர்களை இணைப்பது மற்றும் அனைத்து முஹல்லாக்களிலும் ஆதரவை நாடுவது என கோரிக்கையை தலைமையகத்திற்கு எடுத்துச் செல்வது எனவும் இதன் மூலம் நமது சேவை மேம்படவும், ஏழை எளிய பயனாளிகள் பல முஹல்லாக்களின் மூலம் சென்றடைய வாய்ப்பாக அமையும் என்பதனை இக்கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
2) ரியாத் கிளையில் செயல்படுவது போன்று தலைமையகத்தின் வருட சந்தா வசூலை மாதாந்திர / வருட சந்தாக்களை WHATSAPP மூலம் GROUP உருவாக்கப்பட்டு இதன் மூலம் இலகுவாக சந்தாக்களை வசூலிக்கும் திட்டம் பற்றி விரிவாக கலந்து ஆலோசிக்கப்பட்டு அதனை தலைமையகத்திடம் முன் வைக்கப்பட்டது.
3) வெளிநாடுகளிலிருந்து தாயகம் விடுமுறையில் சென்ற சகோதரர்களுக்கு தலைமையகம் மூலம் அழைப்பு அனுப்புவது சம்பந்தமாகவும் அதனை தொடர்ந்து மாதாந்திர கூட்டங்களில் அவசியம் கலந்து கருத்துக்களை பரிமாறிக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கான லோக்கல் தொடர்பு நம்பர்களை தலைமையகத்திடம் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
4) ரியாத் கிளையின் இவ்வரிட 2021 இறுதிக்கட்ட பென்ஷன் Q4 ( QUARTER 4 ) விஷயமாக நினைவூட்டப்பட்டு அதற்காக வாக்களித்த அனைவர்களும் இம்மாத இறுதிக்குள் பொறுப்புதாரிகளிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
5) ABM-ன் கல்விச்சேவையையும் அதற்கான முன் ஏற்பாடுகளையும் தலைமையகத்தின் வேண்டுகோளை நமதூர் ஏழை எளிய மக்கள், தன் பிள்ளைகளை ABM-ல் தலைமையகத்தில் பதிவு செய்து அதற்கான அனைத்து உதவிகளையும் பெற்று நமதூர் கல்வியில் சிறப்பாக பெற வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்பட்டது.
6) இன்ஷா அல்லாஹ் அடுத்த 93-வது அமர்வு NOVEMBER மாதம் 12-தேதி வெள்ளிக்கிழமை மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெறும். அதில் அதிரை வாசிகள் அனைவர்களும் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்பட்டு கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
ஜஸாக்கல்லாஹ் ஹைரன்
