தேதி:14/12/2021


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் உதவியால் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 95-வது மாதாந்திர கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சி நிரல்:-
கிராஅத் : சகோ. பைசல் அஹமது ( உறுப்பினர் )
முன்னிலை : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை : சகோ. அஹமது அஸ்ரப் ( துணை தலைவர் )
சிறப்புரை : A.M.அஹமது ஜலீல் ( செயலாளர் )
அறிக்கை வாசித்தல் : சகோ. ஷேக் மன்சூர் ( துணை செயலாளர் )
நன்றியுரை : சகோ. நெய்னா முகமது ( ஒருங்கிணைப்பாளர் )
தீர்மானங்கள்:
1) வரக்கூடிய ரமலான் மாதத்தில் வழமை போல் ஒரு கிட் ரூ1200 விலை மதிப்புள்ள பொருள்கள் வழங்க இருப்பதால் அதற்கு பங்கு அளிப்பர்வர்கள் அடுத்த அமர்வில் பெயர் கொடுக்க தீர்மானிக்கப்பட்டது.
2) அரசின் இலவச திட்டங்களான பென்ஷன் காப்பீடு இலவச தையல் மெஷின் மற்றும் அரசின் சலுகைகள் ஏழைகளுக்கு கிடைப்பதற்கு ஆவன செய்யும் ABM தலைமையகதுக்கு நன்றியும் பாராட்டுகளும் தெரிவிக்கபட்டது.
3) வட்டி இல்லாத நகை கடன் அதிகரிப்பதற்காக பொருளாதாரத்தை மேம்படுத்தும் வண்ணம் ரெக்கரிங் டெபாசிட் செய்வதன் அவசியம் மற்றும் நன்மைகளை தெளிவுபடுத்தி அதில் பங்கு பெற ஆர்வம் செய்யப்பட்டது.
4) இந்த வருட ஜகாத் தொகையை அதிகரிக்க ABM விழிப்புணர்வு மற்றும் பரப்புரை திட்டத்துக்கு முழு ஒத்துத்துழைப்பு அளிப்பது என முடிவுசெய்யப்பட்டது.
5) இந்த வருட பென்ஷன் இதுவரை 33 நபர்களுக்கு ரியாத் சார்பாக கொடுக்க பங்குதாரர்கள் முன்வந்துள்ளர்னர் மேலும் பங்குதாரர்கள் அதிகரிக்க வெளியூர் மற்றும் செல்வந்தர் மூலம் திரட்ட முடிவுசெய்யப்பட்டது.
6) இதுவரைலான ABM சேவைகள் முழு விவரம் எத்திவைக்கும் வண்ணம் ஜும்மா நோட்டீஸ்,மீடியா மற்றும் முஹல்லாஹ் பள்ளிகளில் பரப்புரை செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது.
7) இன்ஷா அல்லாஹ் அடுத்த 96-வது அமர்வு FEBRUARY மாதம் 11-ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறும். அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்பட்டு கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
ஜஸாக்கல்லாஹ் ஹைரன்`