Wednesday, March 4, 2026

கூட்டணிக்கு துரோகம் விளைவித்த பதவியை உடனடியாக ராஜினாமா செய்யுங்கள், இல்லாவிடில் நீக்கப்படுவீர்கள் ஸ்டாலின் எச்சரிக்கை..!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகம் முழுவதும் மேயர்,துணை மேயர்க,நகராட்சி,பேரூராட்சிக்கான தலைவர் மற்றும் துணைத்தலைவர்களை தேர்தல் நடைபெற்றது.இதில் நகராட்சி,பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய இடங்களுக்கான தேர்தலில் கூட்டணிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலும் திமுகவினரே போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலக்கிருஷ்ணன் மற்றும் விசிக தலைவர் தொல்.திருமா ஆகியோர் இந்த செயலை கண்டித்தனர்.மேலும் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.இந்நிலையில் உடனடியாக திமுக தலைவர் ஸ்டாலின் உடனடியாக அறிக்கை வெளியிட்டுள்ளார்

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய பதவிகளுக்கு போட்டியிட்டு தேர்வான அனைத்து திமுகவினரும் உடனடியாக பதவி விலக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு.
அவர்கள் உடனடியாக பதவி விலகிவிட்டு தன்னை நேரில் வந்து சந்திக்க வேண்டும் இல்லாவிடில் கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவீர்கள் முதலமைச்சர் ஸ்டாலின்.

இதே போல அதிராம்பட்டினம் நகராட்சி துணைதலைவர் பதவி கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் திமுக நகர செயலாளர் குணசேகரன் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.தலைமையின் உத்தரவுபடி ராஜினாமா செய்வாரா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப்...

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...
spot_imgspot_imgspot_imgspot_img