Tuesday, February 3, 2026

அதிரையில் குப்பைக்கு குட்பை – மாஸ்காட்டும் மன்சூர்!

spot_imgspot_imgspot_imgspot_img

கடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் 21வது வார்டில் போட்டியிட்டு வென்ற Z. மன்சூர் தமது வார்டை குப்பையற்ற முன்மாதிரி வார்டாக மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

வீதிகளில் வீசி எரியும் குப்பைகளால் கொடிய நோய்கள் மக்களை ஆட்கொள்ளும் என்ற விழிப்புணர்வை வார்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக வார்டுக்கு உட்பட்ட அனைத்து வீடுகளுக்கும் குப்பை கொட்டும் வாளி ஒன்றை வழங்கியுள்ளார்.

சுமார் 250 வாளிகளை கொள்முதல் செய்த மன்சூர், இதனை அப்பகுதி மக்களுக்கு வழங்க திட்டமிட்டார் . அதன்படி நேற்று நகர தலைவர் தாஹிரா அம்மாள் கரிம், துணை தலைவர் இராம. குணசேகரன் உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வழங்கினர்.

இதனை பெற்றுகொண்ட அப்பகுதி மக்கள் எங்கள் வார்டின் சுகாதாரமே முதல் இலக்கு என்ற அடிப்படையில் செயல்படும் வார்டு கவுன்சிலருக்கு வார்டு மக்களாகிய நாங்கள் முழு ஒத்துழைப்பை வழங்குவோம் என்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img