92
அதிராம்பட்டினம் அல் அமீன் பள்ளி அருகில் உள்ள மின்மாறறியில் இருந்து செல்லும் உயரழுத்த மின் கம்பி நள்ளிரவில் அறுந்து விழுந்துள்ளது.
அதிகாலை நேரத்தில் அவ்வழியே சென்ற 17 வது வார்டு மஜக பொறுப்பாளர் மர்ஜுக் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார் யாரும் போனை எடுக்கவில்லை.
அலுவலக தொடர்பு எண்ணுக்கு டயல் செய்தும் டயேடான அவர் கடுப்பாகி காவல் நிலையம்.சென்று விபரத்தை கூறியுள்ளார்.
உனடடியாக களத்தில் இறங்கிய காவலர் மின்வாரிய அலுவலகம் சென்று ஊழியரை அழைத்து வந்துள்ள்ளார்.
ஸ்பாட்டுக்கு வந்த மின்வாரிய ஊழியர் அய்யய்யோ… இது உயரழுத்த ராடு ஆச்சே கடவுளுத்தான் காப்பாத்தி இருக்காரு என புலம்பியப்படியே பணியை முடித்தார்.