பட்டுக்கோட்டை தாலுகாவிலிருந்து வருவாய் கிராமங்களை பிரித்து புதிதாக அதிராம்பட்டினம் தாலுகா உருவாக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக ஏரிப்புறக்கரை வருவாய் கிராமத்தை அதிராம்பட்டினம் தாலுகாவுடன் இணைக்க இசைவு தெரிவித்து ஊராட்சி மன்ற தலைவர், உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் கடிதத்தில் கையொப்பமிட்டு அதிகாரிகளிடம் வழங்கினர். இதேபோல் பிற வருவாய் கிராமங்களில் வசிக்கும் மக்களிடமும் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. கடலோர மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் விரைவாக கிடைத்திடவும், புயல் போன்ற பேரிடர் காலத்தில் மீட்பு மற்றும் புனரமைப்பு பணியை துரிதமாக மேற்கொள்ளவும் அதிராம்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கி ஆக வேண்டியது காலத்தின் கட்டாயம்.
More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!
அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)
அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...
அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!
நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில்
இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...





