Tuesday, December 16, 2025

அதிரையை ஆட்டிபடைக்கும் டெங்கு – ஆபத்தான நிலையில் ஒருவர் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதி !

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் நோய் பரவி வருகிறது இதனால் அரசு, தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

காலை வேளைகளில் மட்டும் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பணி செய்வதால் மற்ற நேறங்களில் வரும் நோயாளிகளுக்கு செவிலியர்களே மருத்துவம் பார்க்கும் அபாய நிலை உள்ளது.

இந்த நிலையை போக்க அரசு மருத்துவமனையை 24மணி நேர மருத்துவமனையாக செயல்படுத்த வேண்டும் .

இதனை தவிர்க்க ஏழை மக்களும் தனியார் மருத்துவ மனைகளை நாடி வருகிறார்கள்.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் அபாயகரமான மர்ம காயச்சலினால் பிடிக்கப்பட்ட மக்கள் பட்டுக்கோட்டை உள்ளிட்ட நகரங்களில் சிறப்பு மருத்துவர்களை அனுகி வருகிறார்கள்.

அதிராம்பட்டினம் நகராட்சி நிர்வாகம் அமையப் பெற்று பல மாதங்கள் ஆகியும் சொல்லி கொள்ளும் அளவிற்கு சுகாதார மேம்பாடுகள் செயல்படுத்த வில்லை.

ஆங்காங்கே சிறு பாலங்கள் உள்ளிட்ட வடிகால் பணிகள் மும்முரமாக நடைபெறுவதும், இதனால் தடுக்கப்பட்ட கழிவு நீர்களால் தற்போது டெங்கு உள்ளிட்ட அபாயகரமான நோய்கள் பரவுவதாக கூறுகின்றனர்.

பாலங்கள் வடிகால்கள் அவசியம்தான் என்றாலும்,மக்களின் சுகாதாரம் அதைவிட அவசியம் என்பதை மனதில் கொண்டு நகரில் நிலவும் கொசுத் தொல்லையை ஒழித்தால் ஓரளவுக்கு நோய்கள் இன்றி வாழ முடியும்.

ஆதலால் நகர தலைவர்,மற்றும் துணைத்தலைவர் அதிரை நகரில் நிலவும் கொசு தொல்லையை ஒழிக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களை காக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தன்னார்வ குருதிக் கொடையாளர் விருது பெற்ற அதிரையர் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்...

தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்ற குழுமம் சார்ப்பாக உலக குருதி தினத்தையொட்டி, இன்று 17.06.2025 செவ்வாய்க்கிழமை சென்னை ஓமாந்துர் அரசு மருத்துவ கல்லூரி...

அதிரை அரசு மருத்துவமனையில் ஹிஜாமா கப் தெரப்பி சிகிச்சை முகாம்..!!

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவமனையாக இயங்கி வருகிறது, இங்கு புற நோயாளிகள், உள் நோயாளிகள் நூற்று கணக்கானோர் தினமும் சிகிச்சை...

அதிரையில் NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் உதயம்.!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சேர்மன்வாடி அருகே NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் இன்று(27/10/2024) உதயமானது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்.N. முகமது ஜெசீம், MBBS..,MD..,D.Diab.DFC அவர்கள்...
spot_imgspot_imgspot_imgspot_img